அமுதசுரபி

'புகப் புகப் புக இன்பமடா போதெல்லாம்!'- பாரதி

Saturday, August 20, 2005

வலைப் பதிவு தொடங்கிவிட்டார், மறவன்புலவு க. சச்சிதானந்தன்



சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் காந்தளகம் பதிப்பகத்தின் உரிமையாளர்; ஐ.நா.உணவு வேளாண் அமைப்பின் ஆலோசகராகப் பணியாற்றியவர்; விலங்கியலிலும் தமிழிலும் முதுகலைப் பட்டதாரி;

தனித் தமிழில் எழுதும் வெகு சிலரில் ஒருவர்; பதிப்புத் தொழில் உலகம் என்ற மாத இதழைத் தொடங்கி நடத்துபவர்; www.tamilnool.com என்ற இணைய தளத்தில் 35 ஆயிரத்திற்கும் மேலான நூல்களைப் பட்டியல் இட்டு, மின் வணிகத்திற்கு வழிகோலியவர்;

ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்துள்ளவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்;

திறமை எங்கிருந்தாலும் ஏற்றுப் போற்றும் நல்ல மனிதர்; அமுதசுரபிக்குப் பல நல்ல படைப்புகளை வழங்கியவர்...... ஒரு வலைப் பதிவைத் தொடங்கிவிட்டார். http://sachithananthan.blogspot.com/ பல துறைகளில் ஆழ்ந்த பட்டறிவும் தொலைநோக்குச் சிந்தனையும் கொண்ட மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.
- அண்ணாகண்ணன்

Sunday, August 14, 2005

சுதந்திர தின நல்வாழ்த்துகள்

இந்தியா, இன்று தன் 59ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. கடும் பாதுகாப்புக்கு இடையில் நாடெங்கிலும் கொடியேற்றங்களும் சுதந்திர தினப் பாடல்களும் கொடி குத்திக்கொண்ட மார்புகளும் காணக் கிடைக்கின்றன.

இதை முன்னிட்டுக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வானொலி மற்றும் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதன் முக்கிய அம்சங்கள்:

*நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம்
*பெருநகரங்களில் வெள்ளநீர் வடிகால் கட்டமைப்பு
*பூகம்ப முன்னெச்சரிகை ஆய்வு அமைப்பு
*2030 ஆம் ஆண்டுக்குள் எரிசக்தியில் தன்னிறைவு
*மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம்
*வேளாண் துறையில் சூரியசக்தி பயன்பாடு
*அணுமின் உற்பத்தியை 10 மடங்கு அதிகரிக்க இலக்கு
*நகர திடக் கழிவுகளிலிருந்து மின்னுற்பத்தி திட்டம்
*மின்விநியோகத்தில் இழப்பைக் குறைப்பதன் மூலம் ரூ.70 ஆயிரம் கோடியை சேமிக்க இலக்கு
*தாவர எரிபொருள் உற்பத்தியை ஊக்குவிக்க ஆய்வு
*நிலத்தடி நீர் சேமிப்புத் திட்டத்துக்கு முக்கியத்துவம்
*கடல் நீரை நன்னீராக்கும் திட்டம்
(நன்றி : தினமணி)

இன்னும் பத்தே ஆண்டுகளில் வறுமையை நாட்டிலிருந்து ஒழிக்க முனைப்போடு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். இவை அனைத்திற்கும் நாம் அனைவரும் இணைந்து பாடுபடவேண்டும். எல்லாம் நல்லவண்ணம் நடைபெறட்டும். ததாஸ்து!

வாசகர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள், விளம்பரதாரர்கள், விற்பனையாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன், பொறுப்பாசிரியர்.

Tuesday, August 09, 2005

இன்றே கடைசி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்றே கடைசி நாள்.

இந்திய நேரப்படி இன்று இரவு 12 மணி வரை வரும் படைப்புகளைப் போட்டிக்குச் சேர்த்துக்கொள்வோம். எழுதலாமா, வேண்டாமா என மதில் மேல் பூனையாக இருப்போர், உடனே செயலில் இறங்குங்கள். முயற்சி திருவினையாக்கும்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.

நாளை கடைசி நாள்.

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு நாளையே கடைசி நாள். இதுவரை அனுப்பாதவர்கள், உடன் எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.

Monday, August 08, 2005

இன்னும் 2 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 2 நாள்களே பாக்கி. இதுவரை அனுப்பாதவர்கள், உடன் எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.

Sunday, August 07, 2005

இன்னும் 3 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 3 நாள்களே பாக்கி. முந்துங்கள். உடன் எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.

Saturday, August 06, 2005

இன்னும் 4 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 4 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்

Friday, August 05, 2005

இன்னும் 5 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 5 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்

Thursday, August 04, 2005

இன்னும் 6 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 6 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்

Wednesday, August 03, 2005

இன்னும் 7 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 7 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்

Tuesday, August 02, 2005

அமுதசுரபியின் ஓவியச் சிறப்பிதழ்



அமுதசுரபியின் ஓவியச் சிறப்பிதழ் வெளிவந்துவிட்டது. 82 வயது நிறைந்து, வலக் கை தடைப்பட்ட போதும் இடக் கையால் வரையும் கலைமாமணி கோபுலுவின் அட்டைப் படத்துடன், பல்வேறு கட்டுரைகள் சிறப்பிதழை அலங்கரிக்கின்றன.

திருப்பூர் கிருஷ்ணன், பத்திரிகைகளுக்கு ஓவியங்கள் வரைந்த / வரையும் இருபதுக்கும் மேற்பட்ட ஓவியக் கலைஞர்களைப் பற்றி எழுதியுள்ளார். 20 ஓவியர்களின் புகைப்படங்களோடு அதை வெளியிட்டுள்ளோம்.

கலை விமர்சகர் தேனுகாவின் நீண்ட நேர்காணல் இடம்பெற்றுள்ளது. புகழைத் தேடி அலையும் கலைஞர்களுக்குப் படைப்புத் திறன் நின்றுவிடும் (Creative Menopausity) என்ற தலைப்பில், அவருக்குள் கலை, குடிகொண்ட விதம், நவீன ஓவியங்களின் அறிவியல்பூர்வ இலக்கணம், மரபு சார்ந்த கலைகளின் அழகியல், விருது பெறுவதில் உள்ள அரசியல், தந்திரங்கள், அவர் கலை விமர்சகர் என்ற அடையாளத்தை மறுப்பது.... எனப் பல கூறுகளை இந்த நேர்காணலில் வாசிக்கலாம்.

கவிஞர் எஸ். வைதீஸ்வரன், சிறந்த ஓவியரும் கூட. அவர், தன் ஓவியங்களில் தனக்குப் பிடித்த ஓவியங்கள் சிலவற்றைக் குறிப்புடன் அளித்துள்ளார்.

கலை இயக்குநர் டிராட்ஸ்கி மருது, தூரிகையின் வேகம் என்ற தலைப்பில் கணினி மென்பொருள்களைப் பயன்படுத்தி வரையத் தொடங்கியதும், ஓவியர்களுக்கு எவ்வளவு தூரம் வசதி ஏற்பட்டுள்ளது, நேரமும் உழைப்பும் மிச்சமாகின்றன, படைப்பு துல்லியம் பெறுகிறது என்று எழுதியுள்ளார்.

இம்மாதச் சித்திரசுரபியில் சென்னை ஓவியக் கல்லூரியின் சுடுமண் துறைத் தலைவராகப் பணியாற்றும் ஓவியர் சந்ருவின் படைப்புகள் அலங்கரிக்கின்றன.

டொரண்டோவில் ஜீவனுடன் இரண்டு நாட்கள் என்ற தலைப்பில் வெங்கட் சாமிநாதன், ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார். கனடாவில் வசிக்கும் ஈழத்து ஓவியர் ஜீவனின் ஓவியங்கள் பற்றியும் ஒண்டேரியோ கலைக் கூடத்தில் ஆங்கிலேய சிற்பி ஹென்ரி மூரின் படைப்புகள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பற்றியும் தனக்கே உரிய நடையில் விவரிக்கிறார்.

பவித்ரா சீனிவாசன், கார்ட்டூன் கலைஞர்கள், பாத்திரங்கள் பற்றி, அழகாக எழுதியுள்ளார்.

ஓவியர் என். சீனிவாசன், தேவை: நுண்கலைப் பல்கலைக்கழகம் என்ற தலைப்பில் உயர்கல்வியில் ஓவியம் தொடர்பாக என்னென்ன பாடங்களை எங்கெங்கு படிக்கலாம் என்று வழிகாட்டுகிறார்.

இவையன்றி, இம்மாத வசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டியிலும் கற்பகாம்பாள் கவிதைப் போட்டியிலும் வெற்றி பெற்ற படைப்புகள் வெளியாகியுள்ளன. மு.ஜனகவல்லி என்பவரின் ஆளவந்தார் என்ற வரலாற்றுச் சிறுகதையும் ஆர். வெங்கடேஷின் அலைவரிசை என்ற வாமன கதையும் வெளிவந்துள்ளன.

முகுந்த் நாகராஜன், மாத்தளை சோமு, பொன்.குமார் ஆகியோரின் கவிதைகளோடு என் சிறுவர் பாடலும் வெளிவந்துள்ளது. கவிதாயினி மதுமிதாவின் படைப்புகள் பற்றிய என் பார்வையை முன்வைத்துள்ளேன்.

இம்மாதத் தலையங்கம், ஆக்கிரமிக்கப்படும் நீர்நிலைகள் பற்றியும் அவற்றைப் போர்க்கால அடிப்படையில் பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தைப் பற்றியும் பேசுகின்றது.

மேலும் பல சுவையான பகுதிகள், உங்கள் கவனத்தை ஈர்க்கக் காத்திருக்கின்றன.

இன்னும் 8 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 8 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்

Monday, August 01, 2005

இன்னும் 9 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 9 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள்.
மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்